மின்வெட்டுப் பிரச்சினைக்கு அதிமுக அரசே காரணம்: மத்திய அமைச்சர் சிரஞ்சீவி குற்றச்சாட்டு

தமிழகத்தில் நிலவும் மின் வெட்டுப் பிரச்சினைக்கு அதிமுக அரசே காரணம் என்று நடிகரும் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி குற்றம் சாட்டினார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து, மத்திய அமைச்சரும், சீமாந்திரப் பகுதி பிரச்சாரக் குழுத் தலைவரு மான நடிகர் சிரஞ்சீவி, ஓசூர், பாகலூர், சூளகிரி உள்ளிட்ட பகுதி களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:

மத்திய காங்கிரஸ் அரசு ஏழைகளுக்கும், சிறுபான்மை மக் களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும், மாநில அரசின் திட்டங்களாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழகத்தில் வழங்கப்படும் இலவச அரிசிக்கு மத்திய அரசு ரூ.26.25 மானியமாக வழங்குகிறது. தமிழக அரசு ரூ.3.75 மட்டுமே வழங்குகிறது. ஆனால், தமிழக அரசுதான் இலவச அரிசி வழங்குவ தாக விளம்பரம் செய்து கொள்கின் றனர். இதேபோல், 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் ஆகியவை மத்திய அரசின் திட்டங்கள்தான்.

அதிமுக, திமுக-விற்கு வாக்க ளித்தால், அது மதவாதக் கட்சிக ளுக்கு வாக்களித்ததற்கு சமம். திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர் கள், மத்தியில் அமைச்சர் பதவி யைப் பெறுவதற்காகத்தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அருகில் உள்ள கர்நாடக மாநிலத் தில் மின் தடை கிடையாது. ஆனால், தமிழகத்தில் 12 மணி நேரத்திற்குமேல் மின் வெட்டு நிலவுகிறது. இதற்கு அதிமுக அரசுதான் காரணம்.

கூடங்குளத்தில் பல கோடி செலவில் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டு, மின்சாரம் உற் பத்தி செய்யப்படுகிறது. இதில் 50 சதவீத மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தும், அதைப் பெற தமிழக அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால்தான் மின் பற்றாக்குறை நிலவுகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE