மத்திய தேர்தல் ஆணையம் கட்சிகளுடன் 12-ல் ஆலோசனை

By எஸ்.சசிதரன்

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடன் வரும் 12-ம் தேதியன்று, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24-ம் தேததியன்று 39 நாடாளு மன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு கருவிகளைத் தயார் செய்வது போன்ற அடுத்தக் கட்டப்பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தேர்தலைச் சிறப்பாகவும், நேர்மையாகவும் நடத்துவது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தை வரும் 12-ம் தேதி (சனிக்கிழமை) நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவெடுத் துள்ளது. சென்னைத் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் கூட்டம் முடிந்தபிறகு, தமிழக போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன், மத்திய தேர்தல் ஆணையத்தினர் தேர்தல் பற்றி விவாதிப்பார்கள். அதைத் தொடர்ந்து, தேர்தல் துறை அதிகாரிகள், தேர்தல் தொடர்பாக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளுடனும் மாலையில் ஆலோசனை நடை பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்