ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கண்ணி வெடித் தாக்குதலில் தேர்தல் அலுவலர்கள் 4 பேர் மற்றும் ஒரு காவலர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக காவல்துறை தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், “ஷிகாரிபாரா சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அஸ்னாஜோர் பகுதியில் தேர்தல் பணி முடிந்து தேர்தல் அலுவலர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நக்சல்களின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கினர்.
இதில் தேர்தல் அலுவலர்கள் 4 பேரும், ஒரு காவலரும் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்” என்றார்.
ஜார்க்கண்டில் தும்கா, ராஜ்மகால், கோட்டா, தன்பாத் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடந்தது.
காஷ்மீரில் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் நக்பால் வாக்குச்சாவடி மீது தீவிரவாதிகள் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு தேர்தல் அலுவலர் உயிரிழந்தார். 2 தேர்தல் அலுவலர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago