வெளிநாட்டு வங்கியில் பணம் குவித்ததை நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சவால்

“நான் வெளிநாட்டு வங்கியில் ஒரு ரூபாய் வைத்திருப்பதை நிரூ பித்தால் கூட வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்கத் தயார்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நான் வெளிநாட்டு வங்கியில் ரூ.3 ஆயிரம் கோடி பதுக்கி வைத்திருப்பதாக முன்பு செய்தி வெளியிட்டது. அன்றைய தினமே நான் நீதிபதியிடம் சென்று அந்தச் செய்தியைக் காட்டி, நான் வெளிநாட்டில் ஒரு ரூபாய் அல்லது ஒரு அமெரிக்க டாலர் பதுக்கி வைத்திருப்பதை நிரூபித்தால், 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கை எதிர்த்து வாதாட மாட்டேன். உடனே, சிறைக்குச் சென்று என் வாழ்நாள் முழுக்க இருக்கத் தயார் என்றேன்.

மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் கணிப்பை அடிப்படை யாக வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2ஜி அலைவரிசைக்கும், 3ஜி அலை வரிசைக்கும் வேறுபாடு உண்டு.

மிகப்பெரிய ஊழல் என்று ஊடகங்கள் சித்தரித்திருப்பது எல்லாம் அனுமானத்தின் அடிப் படையில் அமைந்தவை. அதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. தொழில் அதிபர்களின் போட்டியால், அலைவரிசை ஒதுக்கீட்டில் பாதிக்கப்படும் நிறுவனங்கள் என்னை பலிகடாவாக்கிவிட்டன என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE