பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அரசியல் ஆதாயத்துக்காக கார்கில் போர் தியாகிகளின் பெயர்களை பயன்படுத்தி வருகிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கார்கில் போரின்போது தனியார் குளிர்பான நிறுவனத்தின் “யெ தில் மாங்கே மோர்” (உள்ளம் இன்னும் கேட்குமே) என்ற விளம்பர வாசகம் மிகவும் பிரபலம்.
போர் மும்முரமாக நடைபெற்ற போது இந்திய ராணுவ கேப்டன் விக்ரம் பத்ரா இந்த விளம்பர வாசகத்தைப் பயன்படுத்தி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
அவரது பேச்சுகள் அடங்கிய வீடியோ வடஇந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போரில் வீரமரணம் அடைந்த அவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் கேப்டன் பத்ராவின் சொந்த ஊரான இமாசலப் பிரதேசம், பாலம்பூரில் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, இந்த விளம்பர வாசகத்தைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இமாசலப் பிரதேசம் குலு நகரில் ஞாயிற்றுக் கிழமை அவர் பேசியதாவது:
மோடியின் இதயம் ஆட்சி, அதிகாரப் பேராசையால் பீடிக்கப் பட்டுள்ளது. அதனால் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அவர் அரசியல் ஆதாயம் தேடுகிறார். தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே அவர் தன்னை பிரதமராகப் பாவித்து நடந்து கொள்கிறார் என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago