சோனியாவின் திடீர் கடவுள் பற்று: மோடி கிண்டல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இப்போது திடீரென கடவுளை குறிப்பிட்டு அடிக்கடி பேசிவருகிறார் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.

பிரிவினைவாத கொள்கைகள் கொண்ட நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வராமல் இந்த நாட்டை கடவுள் காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில் பேசினார்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், காலிலாபாத் என்ற இடத்தில் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் விக்கெட் ஒவ்வொன்றாக சரிந்து வருகிறது. கடந்த 20 25 ஆண்டுகளில் சோனியா காந்தி கடவுள் பெயரை குறிப்பிட்டு பேசியதாக நான் அறியவில்லை. இப்போது கடவுளை வேண்டுகிறார் என்றால், காங்கிரஸ் கட்சி எத்தகைய பிரச்சினையை சந் தித்து வருகிறது என்பதை நீங் கள் நினைத்துப் பாருங்கள். காங்கிரஸ் தலைமையிலான இப்போதையை அரசு மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. புதிய அரசு அமைவதற்கான வலு வான அடித்தளம் இத் தேர்தலில் அமைக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை என்ற போர் வையில் காங்கிரஸ் என்னை தாக்கிப் பேசிவருகிறது. அதி காரத்தை கைப்பற்றுவதற்காக இந்த வார்த்தையை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. உங்களின் மகிழ்ச்சிக்காக நான் போராடு கிறேன். அவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக போராடுகின்றனர்.

நிலம், சுரங்கம், ஆகாயம், தண்ணீர் என ஒவ்வொரு துறை யிலும் சுரண்டல் மூலம் பெருமளவு ஊழல் செய்து, இந்த நாட்டை ஊழல் மிகுந்த நாடாக காங்கிரஸ் மாற்றிவிட்டது. உலகின் ஊழல் நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.

வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 6 ஆண்டுகளில் 6 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் தனது 2009-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என கூறியிருந்தது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 1.5 கோடி பேருக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கப் படவில்லை.

சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உங்கள் நலனுக்காக செய்த ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு சொல்லுங்கள். டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதுதான் அவர்கள் செய்யும் ஒரே செயல்.

உ.பி.யில் உள்ள தந்தை மகன் அரசு டெல்லியில் உள்ள தாய் மகன் அரசை இம்முறை காப்பாற்ற முடியவில்லை. இதனால்தான் சோனியா அடிக்கடி கடவுளை வேண்டுகிறார். இதிலிருந்து அவர்களின் பிரச்சினை எத்தனை பெரியது என்பதை நீங்கள் உணர முடியும் என்றார் மோடி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE