காங்கிரஸுக்கு 3-வது அணியை ஆதரிக்கும் நிலை வரக்கூடும்: காரத் பேட்டி

By செய்திப்பிரிவு

பாஜக மத்தியில் அரசு அமைப் பதைத் தடுக்க மதச்சார்பற்ற கட்சிகள் சேர்ந்து அமைக்கும் அரசுக்கு ஆதரவு தரவேண்டிய கட்டாய நிலைமை காங்கிரஸுக்கு ஏற்படும் என நம்பிக்கை தெரி வித்தார் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறிய தாவது:

மக்களவைத் தேர்தல் முடிவு களைப் பொறுத்து மதச்சார்பற்ற மாற்று அணி மத்தியில் அரசு அமைப்பதை உறுதி செய்ய வேண் டிய பொறுப்பு காங்கிரஸுக்கு ஏற்படும்.

பாஜக தலைமையில் ஆட்சி அமைவதை காங்கிரஸ் விரும்ப வில்லை என்றால் மதச்சார்பற்ற மாற்று அணியை உருவாக்குவதில் காங்கிரஸ் முக்கிய பங்காற்ற வேண்டிவரும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பிடிப்பதை தடுக்க மூன்றாவது அணியில் தமிழகத்தின் அதிமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது.

1996ல் தேவ கவுடா தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்தபோது வெளியிலிருந்து காங்கிரஸ் ஆதரவு அளித்தது போன்ற நிலைமை இப்போதும் திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

பாஜகவும் காங்கிரஸும் நேரடி யாக மோதும் மாநிலங்களில் காங் கிரஸ் எதிர்ப்பு அலையானது பாஜகவுக்கு சாதகமாக கைகொடுக் கும் என்பது புரிகிறது. ஆனால் நாடு முழுவதிலும் மோடி அலை வீசுவதாக நான் நம்பவில்லை.

பிராந்திய கட்சிகள் பலம் வாய்ந்தவையாக உள்ளன. அவை பாஜகவுக்கு சரியான எதிர்ப்பு கொடுக்கின்றன. மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி அமைத்தால் இந்த கட்சிகள் பங்கேற்காது.

காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் அடங்கிய அணிக்கு வெளியிலிருந்து காங் கிரஸ் ஆதரவு கொடுத்தால் அதற்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும். சில மதச்சார்பற்ற கட்சிகள் சந்தர்ப்ப லாபம் கருதி பாஜகவுடன் கூட்டணி வைத் துள்ளன. இவை எந்த கட்சிகள் என்பது வெளிப்படை.

காங்கிரஸ் அல்லாத பிரிவிலும் பாஜக அல்லாத பிரிவிலும் பெரும் பாலான பிராந்திய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் இந்த தேர்தலில் பாஜகவுடனோ அல்லது காங்கிரஸுடனோ கைகோக்க வில்லை.

பாஜகவை எதிர்க்கும் இந்த கட்சிகள் ஆட்சி அமைக்க காங்கிரஸின் ஒத்துழைப்பை கோருவதற்கு தயக்கம் காட்டாது என்பதே எனது நம்பிக்கை.

மூன்றாவது அணிக்கு யார் தலைமை தாங்குவார் என்பது தேர்தல் முடிவு வெளியானதும் தீர் மானிக்கப்படும். 1996ல் ஏற்பட்டது போலவே தேர்தலுக்குப் பிறகு இந்த கூட்டணி அமையும் என்றார் காரத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்