ராகுல் பொதுக் கூட்டத்தில் ‘ஹர ஹர மோடி’ கோஷம்

By செய்திப்பிரிவு

ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் புகுந்து “ஹர ஹர மோடி” கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசம் தியோரா பகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பேசிய அவர், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச வீடு, இலவச மருத்துவ வசதி, பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறினார்.

அப்போது கூட்டத்தில் ஒரு பகுதியினர் “ஹர ஹர மோடி” என்று உரத்த குரலில் கோஷ மிட்டனர். இதனால் அங்கு பதற்ற மான சூழல் ஏற்பட்டது. அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களை அப்புறப் படுத்தினர்.

அதன் பின்னர் ராகுல் காந்தி பேசியதாவது: வறுமைக் கோட்டுக்கு மேலே சுமார் 70 கோடி மக்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி நடுத்தர வர்க்க மக்களாக மாற்ற காங்கிரஸ் முனைப்புடன் செயல் படும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைவிட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், இலவச கல்வி உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என பல்வேறு திட்டங் கள் அமலுக்கு கொண்டு வரப் பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் இப்போது யாரும் பசியோடு தூங்கவில்லை. நாங்கள் அன்பு, சகோதரத்துவம், ஒருமைப் பாட்டை மையமாக வைத்து அரசியல் நடத்துகிறோம். பாஜக வைப் பொறுத்தவரை மக்களிடம் பிரிவினையைத் தூண்டி அரசியல் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்