பெரும்பாலான கணிப்புகள் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பது உறுதி என தெரிவித் துள்ளதால் தேர்தல் முடிவு வெளி யானதும் அதை ஆரவாரமாக கொண்டாடும் முயற்சியில் இறங்கி யுள்ளது அந்த கட்சி.
வரலாற்றுச் சிறப்பு மிக்க சிபி டேங்க் சந்திப்பில் பொதுமக்களுக்கும் கட்சி ஆதரவா ளர்களுக்கும் 2000 கிலோ லட்டு, மற்றும் கேக் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளோம். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை பொது மக்கள் காண வசதியாக பிரம்மாண்ட எல்சிடி திரை நிறுவப் பட்டுள்ளது.
நரேந்திர மோடி பெரும்பான்மை பெற்றதாக முடிவுகள் உறுதி யானதும் உடனடியாக லட்டு விநியோகித்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என்று கூறினார் பாஜக மும்பை பிரிவு செய்தித்தொடர்பாளர் அடுல் ஷா.
அவர் மேலும் கூறியதாவது: லட்டு தயாரிக்க மிட்டாய் தயாரிப் பாளர்களிடம் ஆர்டர் தரப்பட்டுள் ளது. மோடியின் வெற்றிக்கு உழைத்த ஆர்எஸ்எஸ் தொண்டர் களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள்.
இந்தியாவில் ஏதாவது கொண் டாட்டம் என்றால் லட்டு வழங்கு வதுதான் வழக்கம். இந்த லட்டு களை ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற அமைப்புகள் மூலமாக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் செய் வார்கள். எனவே லட்டு செய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம். லட்டு வழங்குவது இந்திய கலாச் சாரத்தின் ஒரு பகுதியாகும்.
கொண்டாட்டத்தில் அவசரம் காட்டவில்லை. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என எல்லோரும் நம்புகிறார்கள். எங்களுக்கும் அதில் நம்பிக்கை உள்ளது. இவ் வாறு ஷா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago