உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் நரேந்திர மோடி. மோடி பிரச்சாரம் செய்த மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரச்சாரத்தின் போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சிக்கு ராமர் பிறந்த பூமியில் வசிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்தார்.
ராமர் கோயிலை மீண்டும் கட்டுவது குறித்து நேரடியாக ஏதும் பேசாவில்லை. தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியதோடு ராமர் பிறந்த பூமியில் பிறந்த மக்கள் வாழ்க்கையை இழந்தாலும் வார்த்தை தவற மாட்டார்கள் என மறைமுகமாக ராமரை மேற்கோள்காட்டி பேசினார்.
இந்நிலையில், மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. இத்தகவலை உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா உறுதிபடுத்தியுள்ளார்.
அண்மையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி பாஜக தாமரை சின்னத்தை கையில் வைத்துக் கொண்டு பேசியது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago