காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு சோனியாவும், ராகுல் காந்தியும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி கூறும்போது, "மக்கள் தங்கள் தீர்ப்பை அளித்துள்ளனர். புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு என் வாழ்த்துக்கள். தேர்தலில் காங்கிரஸ் தோல்வி மோசமாக அமைந்துள்ளது. அதுபற்றி நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது. கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில், தோல்விக்கு நானே அடக்கத்துடன் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்," என்றார்.
அடுத்து பேசிய சோனியா காந்தி பேசும்போது, "மக்கள் எங்களுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர். அந்த தீர்ப்பை நான் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். கட்சியின் தலைவர் என்ற முறையில் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். புதிய ஆட்சிக்கு என் வாழ்த்துக்கள். மக்கள் நலனுக்காகவும், நாட்டின் ஒற்றுமைக்காகவும் காங்கிரஸ் தொடர்ந்து போராடும். இந்த தோல்வியால், காங்கிரஸ் தன் கொள்கைகளை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்து ஓட்டுப் போட்ட மக்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார். இந்நிலையில், "காங்கிரஸ் கட்சிக்கு கிடைத் துள்ள தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பல்ல," என்று காங்கிரஸ் தலைவர்கள் சத்யவிரத் சதுர்வேதி, ராஜீவ் சுக்லா, அபிஷேக் சிங்வி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago