வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க புதிய முறை: மேற்கு வங்க வாக்காளர்கள் வரவேற்பு

நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக தேர்தல் வரிசை மேலாண்மை முறை மேற்கு வங்க மாநிலத்தில் கடை பிடிக்கப்பட்டது. இந்தப் புது முறைக்கு வாக்காளர்களிடையே கணிசமான அளவில் வரவேற்பு கிடைத்ததால் உற்சாகத்தில் இருக்கிறது தேர்தல் ஆணையம்.

ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், வாக்காளர்கள் தங்களின் முறை எப்போது வரும் என்று தெரியாமல் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பெரும் பாலானோர் வாக்களிப்பதைத் தவிர்த்து வந்தனர்.

எனவே, வரிசையில் காத்து நின்று வாக்களிக்கும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் நாட்டி லேயே முதன்முறையாக, தேர்தல் வரிசை மேலாண்மை முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் மூலம் இணையம் மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் வரிசையில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும், தங்களின் முறை எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ளவும் வசதி செய்து கொடுத்திருந்தது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதிய முறை நாட்டிலேயே முதன்முறையாக மேற்கு வங்கத்தில் உள்ள பர்த்வான் மாவட்டத்தின் துர்காபூர், பர்பா ஆகிய‌ இரு தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொகுதிகளில் ஏப்ரல் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவின் போது குறுஞ்செய்தி மூலம் 22,800 பேர் வரிசை நிலை பற்றிய தகவலைக் கேட்டறிந்திருக்கிறார்கள். இணை யம் மூலமாக 44,000 பேரும் கைப் பேசி மூலம் 1,800 பேரும் அழைப்புகள் மேற் கொண்டு வரிசை நிலைத் தகவல்களை அறிந்துள்ளார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE