பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் நிருபர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அவர் கூறியதாவது:
மோடியை எதிர்ப்பவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று அவரது ஆதரவாளரான கிரி ராஜ்சிங் உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். அதற்குப் பதிலாக மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கலாம். அது அவருக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சையது ஷாநவாஸ் ஹுசைன் கூறியபோது, பாகிஸ்தானில் லாலு பிரசாத் மிகவும் பிரபலமாக உள்ளார், எனவே அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதுதான் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிஷார் அலி கான் அண்மையில் அளித்த பேட்டியில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் பதிலளித்தபோது, பாகிஸ்தான் அமைச்சர் வரம்பு மீறி பேசக்கூடாது என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago