கேரளத்தில் காங்கிரஸ் முதலிடம்

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 12 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி முதலிடம் பெற்றுள்ளது. இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி 8 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. இங்கு ஆளும் கூட்டணி 12 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் சசிதரூர், கே.வி.தாமஸ், கே.சி.வேணுகோபால், கொடிக்குன்னில் சுரேஷ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் அதன் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 8 இடங்களில் வெற்றி பெற்றனர். கொல்லம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மாநில கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி தோல்வி அடைந்தார்.

கேரள மாநிலம், சாலக்குடி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோவை. சுயேச்சையாக போட்டியிட்ட மலையாள திரைப்பட நடிகர் இன்னொசன்ட் தோற்கடித்தார்.

இதையடுத்து கேரளத்திலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் திரைப்பட நடிகர் என்ற பெருமையை இன்னொசன்ட் பெற்றுள்ளார்.

காங்கிரைஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி - 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, கேரள காங்கிரஸ் (எம்) 1, புரட்சிகர சோஷலிசக் கட்சி 1, மார்க்சிஸ்ட் கூட்டணியில் மார்க்சிஸ்ட் 5, கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 2, இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE