மதவெறியை தூண்டும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மக்களவைக்கான இறுதிக்கட்டத் தேர்தல்கள் இன்னும் இரு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் அதில் பெரிதாக ஆதாயம் பெறும் நோக்கில் மிக நேர்த்தியாக பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் வகுப்புவாத வெறியை தூண்டிவிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பிரச்சார ஏடான ‘பீப்பிள்ஸ் டெமாக் ரசி’ வாரப்பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அடுத்த இரு வாரங்களில் நடைபெற உள்ள இறுதிக்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் நிறைய தொகுதிகள் உத்தரப் பிரதேசம், பிகாரைச் சேர்ந்தவை.

இந்தி மொழிப் பகுதிகளான இவை மக்களவைக்கு ஏராளமான உறுப்பினர்களை அனுப்பக்கூடியவை. வகுப்புவாத சக்திகளுக்கு ஆதரவாக உள்ளவை இந்த பகுதிகள்.

வகுப்புவாத விஷத்தை பரப்புவதும் மதரீதியில் வாக்காளர்களை இரண்டாக பிரிப்பதும் பா.ஜ.க.வுக்கு ஆதாயத்தை தரலாம். ஆனால் இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, வகுப்பு நல்லிணக்கத்தை இதனால் விலை கொடுத்தாக வேண்டிவரும்.

வாக்கு வங்கி அரசியலின் மிக மோசமான அம்சமே பெரும்பான்மை இந்துக்களை ஒன்று திரட்டுவதாகும். அது நேர்த்தியாக நடைபெறப் போகிறது.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே வங்காளத்தில் பேசும்போது, ‘மூட்டை முடிச்சுக ளுடன் போவதற்கு வங்கதேசத் தவர்கள் தயாராக இருக்க வேண்டும்’ என மிரட்டல் விடுத்துள் ளார். வகுப்புவாத தாக்குதலுக்கு இந்துத்துவா ஆதரவாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதே மோடி விடுத்த எச்சரிக்கை யின் மறைமுக அர்த்தம்.

வங்கதேசத்தவருக்கு எதிரான முழக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தனது வகுப்புவாத கோஷம் எடுபடாத இடங்களில்,தனது உண்மை முகத்தை மறைத்து வளர்ச்சி பற்றி பேசும் பாஜக, பிற இடங்களில் தேர்தல் ஆதாயத்துக்காக வகுப்பு வாதத்தை உசுப்பி வெறி ஏற்றுகிறது. இடத்துக்கு இடம் இரட்டை வேடம் போட்டு பாஜக செயல்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்