ஆந்திராவில் தேர்தலின்போது மோதல்: 20 பேர் காயம்

ஆந்திராவில் வாக்குச்சாவடி மையத்தின் முன் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுப்பட்டனர். இதில் 20 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆந்திராவில் 25 நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று(புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் கடப்பா மாவட்டத்தின் தேவகுடி வாக்குச்சாவடி ஒன்றின் முன் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திடீரென்று மோதலில் ஈடுப்பட்டனர்.

மோதலில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயன்றனர். இதில் மோதலில் காவல்துறையினரின் வாகனங்கள் நொறுக்கப்பட்டன. மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரி பிரசாத் ராவ்,'சீமாந்திராவில் தேர்தலை சீர்க்குலைக்கும் அளவில் சில சம்பவங்கள் நடந்தாலும், தேர்தல் அமைதியான முறையில் நடந்துவருவதாக தெரிவித்தார். மேலும் இறுதி நிலவரப்படி வாக்குகள் 85% முதல் 90% பதிவாகும் என தெரிகிறது. 1 மணி நிலவரப்படி குர்நூலில் 41%, சீமாந்திராவில் 11 மணி நிலவரப்படி 33% வாக்குப்பதிவும் பதிவாகியதாக அறிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE