3-வது அணி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரிக்காது: ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

தேர்தலுக்குப் பிறகு மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் வரும் 7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு ராகுல் சனிக்கிழமை வந்தார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக சார்பில் பயன்படுத்தப்படும் பணம் எங்கிருந்து வருகிறது? மோடியின் சொந்தப் பணமா அது? 3 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெரிய தொகையைப் பெற்றுத்தான் பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் மூலம் ஏழை களுக்கு பணம் தரப்படுவதாக எதிர்க்கட்சி புகார் கூறுகிறது. ஏழைகளுக்கு இலவசமாக எதையும் நாங்கள் தரவில்லை. அவர்கள் வேலை செய்ததற்குத்தான் பணம் பெறுகின்றனர். அதே சமயம், தொழிலதிபர் அதானி போன்றோருக்கு குஜராத் மாநில பாஜக அரசு பல சலுகைகளை அளிக்கிறது. 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சலுகைக் கட்டணத்தில் அவருக்கு மோடி அரசு அளித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நான் எதிரியில்லை. அவர்களுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி சலுகைகளை அளிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.

மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு, ஒரு தொழில திபருக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலத்தையும், ரூ.26 ஆயிரம் கோடி மின் கட்டணச் சலுகையையும் அளித்துள்ளது. இந்த தொகை, ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத் திற்காக ஓராண்டுக்குச் செலவிடப் படும் ரூ.30 ஆயிரம் கோடியை விட அதிகமாகும்.

இந்துக்கள், முஸ்லிம் களிடையே மோதலை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. நாங்கள் அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்ல விரும் புகிறோம்.

இத்தொகுதி மக்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது. எனது 12 வயதில், தந்தை ராஜீவ் காந்தியுடன் இங்கு வந்தேன்.

சிலர் இங்கே வரலாம். எனது கட்சியின் சுவரொட்டிகளை சேதப் படுத்தி, என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் குறை கூறலாம். ஆனால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்கள் யாரும் இங்கே வரமாட்டார்கள். ஆனால், நான் இங்கு வாழ்நாள் முழுவதும் இருப்பேன். இந்த தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள், தேர்தலுக்குப் பிறகு காணாமல் போவார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தால், அமேதி தொகுதிக்கு என்னென்ன வசதிகள் எல்லாம் செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு காட்டுவேன்.

ஆட்சியில் அமர்ந்தவுடன் பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகளில் கூறியுள்ளனர். பெண்களுக்கு ஏற்கெனவே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மரியாதை அளித் தால் போதும், மற்ற அனைத் தையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு ராகுல் கூறினார்.

3-வது அணிக்கு ஆதரவா?

பின்னர், ராகுலை சந்தித்த செய்தியாளர்கள், தேர்தலுக்கு பிறகு புதிய கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயற்சிக்குமா எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராகுல், “மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கையை நாங்கள் பெறுவோம். மூன்றாவது அணி உள்பட எந்தவொரு அணிக்கும் நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்