3 லட்சம் கி.மீ. பயணம் செய்து பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி: 5,827 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று சாதனை

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடி 3 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து, 5,827 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக கடந்த ஆண்டு அறிவித்தது. இதை யடுத்து, தேர்தல் அறிவிப்பு வெளி யாவதற்கு முன்பே அவர் நாடு முழுவதும் பல்வேறு நகரங் களில் சூறாவளி பிரச்சாரம் மேற் கொண்டார்.

அதாவது, ஹரியாணாவின் ரெவாரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் பேரணியில் தொடங்கிய இவரது பிரச்சார பயணம் உத்தரப் பிரதேச மாநிலம் பலியாவில் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதுவரை 25 மாநிலங்களில் நடைபெற்ற 437 பொதுக்கூட்டங்கள், 3-டி தொழில் நுட்ப உதவியுடன் நடைபெற்ற 1,350 பேரணிகளில் மோடி பங்கேற் றுள்ளார். இதுதவிர, நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சுமார் 4,000 (தேநீர் கடை) குழுவினருடன் வீடியோ கான் பரன்ஸ் மூலம் மோடி கலந்துரை யாடி உள்ளார். மேலும், தான் போட்டியிடும் வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய தொகுதி களில் நடைபெற்ற பிரம்மாண்ட மான சாலைப் பேரணிகளில் பங்கேற்றுள்ளார் மோடி. தவிர, தேர்தலுக்கு முன்பு 21 மாநிலங் களில் 38 பேரணிகளில் பங்கேற்றுள் ளார்.

இதன்மூலம், 5 கோடி முதல் 10 கோடி மக்களை மோடி சந்தித்துள்ளதாகவும் இந்திய தேர்தல் வரலாற்றில் அதிகப்படி யான மக்களை சந்தித்த தலைவர் களில் ஒருவராக உருவெடுத்துள் ளதாகவும் பாஜக கூறியுள்ளது. அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக் கும் முக்கிய பகுதியான உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 8 பொதுக்கூட்டங்களில் மோடி உரையாற்றியுள்ளார்.

கர்நாடகாவில் 4, பிஹாரில் 3, தமிழகம், மகாராஷ்டிரா, அசாம், ஒடிசாவில் தலா 2 மற்ற மாநிலங்களில் தலா ஒரு பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்றுள்ளதாக பாஜக கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்