கணவரை விமர்சிப்போருக்கு தக்க பதிலடி கொடுப்பேன் என்று பிரியங்கா காந்தி வதேரா தெரி வித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் ரே பரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்காக அவரது மகள் பிரியங்கா காந்தி வதேரா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
முதல்முறையாக தனது கணவர் ராபர்ட் வதேராவுக்கு ஆதரவாக நேற்று அவர் பேசினார். அவர் கூறியதாவது:
தொலைக்காட்சி செய்தி சேனல் களைப் பார்த்தால் எனது குடும்பத் தினர் குறித்தும் எனது கணவர் குறித்தும் கடும் சொற்கள் அள்ளி வீசப்படுகின்றன.
எனது கணவர் குறித்து அதிகமாக விமர்சிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக எனது கணவர் குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மை பேசப்படவில்லை. இதுகுறித்து எனது குழந்தைகள் கேட்டபோது, உண்மைதான் கடைசியில் வெல்லும் என்று கூறியிருக்கிறேன்.
இப்போதைய தேர்தல் பிரச்சாரத் தில் அரசியல் நாகரிகம் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. சில விமர் சனங்களை கேட்கும்போது மனம் உடைகிறது.
எனினும் இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளேன். உண்மைதான் எனது பாதுகாப்பு கேடயம், எதிராளிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பேன், அவர்கள் எந்த அளவுக்கு தாக்குகின்றனரோ அதைவிட அதிகமாக இன்னும் தீரமாக எதிர்த்துப் போரிடுவேன்.
புத்தர், காந்தி பிறந்த பூமி
இது புத்தர், காந்தி பிறந்த பூமி. சகிப்புத்தன்மையின் பிறப்பிடம். வெளிநாட்டில் பிறந்த எனது தாயை இந்திய மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்திய மக்களிடம் இப்போது சிலர் விஷத்தை உமிழ்ந்து வருகின்றனர்.
இந்திய திருநாட்டில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ் தவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். அதை சீர்குலைக்கும் வகையில் சில சக்திகள் பிரிவினையைத் தூண்டி வருகின்றன.
நான் எனது தாயார் சோனியா காந்திக்காக இங்கு வாக்கு சேகரிக்கவில்லை. இந்தியாவின் நலனுக்காக வாக்கு கோருகிறேன். இந்த நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக, அமைதியாக வாழ காங்கிரஸுக்கு வாக்களிக்கக் கோருகிறேன்.
இவ்வாறு பிரியங்கா காந்தி வதேரா பேசினார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago