வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்கிறார். முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த கேஜ்ரிவால், அமேதி மக்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஏமாற்றுவதாக தெரிவித்தார்.
கேஜ்ரிவால் பேசியதாவது: "அமேதி மக்கள் தங்கள் தொகுதிக்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அமேதியில் வளர்ச்சிப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. உயரப் பறக்கும் ஹெலிகாப்டரை காண்பித்து உங்கள் தலைவர் அதோ செல்கிறார் என கைகாட்டுகின்றனர்.
அந்த நிலைமை வாரணாசி மக்களுக்கும் வந்துவிடக்கூடாது. ஹெலிகாப்டர் ஜனநாயகம் வேண்டுமா இல்லை மக்கள் பிரதிநிதி நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிபவராக இருக்க வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்யட்டும்" என்றார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் விளம்பரங்களுக்காக கோடிக் கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். மோடி, விளம்பரங்களுக்கு ரூ.5000 கோடி செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எங்கு திரும்பினாலும் மோடி, ராகுல் விளம்பரங்கள் தான் உள்ளன. மோடி, ஆட்சிக்கு வந்தால் அவர் ரூ.5 லட்சம் கோடியாவது சம்பாதிப்பார். ஆனால் என்னிடம் பணம் இல்லை. இனி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் யாரை தேர்ந்தெடுப்பது என்று. இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago