தேர்தலில் போட்டியிடாதது எனது தனிப்பட்ட விவகாரம்: பிரியங்கா

By செய்திப்பிரிவு

தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்திருப்பது எனது சொந்த விஷயம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா கூறினார்.

இந்த தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட விரும்பிய தாகவும், ஆனால், கடைசி நேரத்தில் கட்சியின் தலைமை அவரை தடுத்து விட்டதாகவும் திங்கள்கிழமை சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதை மறுத்து பிரியங்கா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தலில் போட்டியிடுமாறு ராகுல் காந்தி பலமுறை என்னை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு நான் உடன்படவில்லை.

தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்தி ருப்பது எனது சொந்த விஷயம். போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், அதன்படி செயல்படுவேன். ஒருவேளை நான் போட்டியிட விரும்பினால், அதற்கு எனது தாயார், சகோதரர் ராகுல் காந்தி, கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் ஆதரவாகத்தான் செயல்படுவார்கள்.

இப்போதைக்கு எனது தாயார் போட்டியிடும் ரே பரேலி தொகுதியிலும், எனது சகோதரர் போட்டியிடும் அமேதி தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு பிரியங்கா கூறினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறும்போது, "இந்திய அரசியலில் மிகப்பெரிய பங்களிப்பை செய்ய வேண்டும் என்று பிரியங்கா முடிவு செய்துவிட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது. அரசியலில் தான் செய்ய வேண்டிய பணியை அவர்தான் தீர்மானிப்பார்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்