பிஹார் மாநிலத்தில் போஜ்புரி மொழி நடிகையான ரீனா ராணியை மூன்று ‘வில்லன்கள்’எதிர்த்துப் போட்டியிடுவதாக தொகுதிவாசிகள் சுவாரசியமாக பேசி வருகின்றனர்.
பிஹாரின் மஹராஜ்கன்ச் மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போஜ்புரி நடிகை ரீனா ராணி (40) போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பியான பிரபுநாத் சிங் களத்தில் உள்ளார். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மனோரஞ்சன் சிங் தூமலும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மைத்துனரான சாது யாதவ் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் 3 பேர் மீதும் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியை தாக்கியது உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இது குறித்து தி இந்துவிடம் பேசிய ரீனா ராணி, ‘தொகுதிவாசிகள் இப்படி பேசுவது உண்மைதான். இந்த வில்லன்களிடம் இருந்து மக்கள் தப்ப வேண்டுமெனில் கதாநாயகியான எனக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும். பொதுவாக திரைப்படத்தின் முடிவில் வில்லன்களுக்கு வெற்றி கிடைப்பது இல்லை’ என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago