அரசியல் கட்சிகள் கொடுக் கும் லஞ்சத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியுள்ளார்.
லஞ்சம் பெறுவதற்கு வாக் காளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான இத்தகைய பேச் சால் அவர் தேர்தல் ஆணை யத்தின் நடவடிக்கைக்கு ஆளாக லாம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி மக்களவை தொகுதியில் கேஜ்ரிவால் நேற்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் அமேதி நகரின் ராணிகஞ்ச் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சுக்லா பஜாரில் அவர் பேசுகையில், “வாக்குகளை பெறுவதற்காக உங்களுக்கு பணம் தருவார்கள். அதை வாங்கிக்கொள்ளுங்கள். அது கஷ்டப்பட்டு உழைக்கும் உங்களின் பணம். 2ஜி, காமன் வெல்த் விளையாட்டு ஊழல் என அவர்கள் கொள்ளையடித்த பணம். புடவைகள், போர்வைகள் தருவார்கள். எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். துடைப்பம் சின்னத் துக்கு வாக்களியுங்கள்” என்றார்.
சோனியா மோடி ஒப்பந்தம்
முன்னதாக கேஜ்ரிவால் பேசுகையில், “சோனியா காந்தி குடும்பத்துடன் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ரகசிய உடன்பாடு செய்துகொண்டுள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மாட்டேன் என உறுதி அளித்துள்ளார். நானும் இத்தொகுதியில் போட்டியிடும் குமார் பிஸ்வாஸும் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகிறோம். ஆனால் மோடியை காங் கிரஸ் கட்சியினரோ, சோனியா குடும்பத்தினரை பாஜகவினரோ தாக்கியதாக கேள்விப்படு கிறீர்களா? இருவரும் ரகசிய கூட்டாளிகள்” என்றார்.
இதனிடையே அமேதி தொகுதியில் அனுமதி பெறாமல் சாலையில் கூட்டம் நடத்தியது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தடையுத்தரவை மீறியதாக, கேஜ்ரிவால், குமார் விஸ்வாஸ் மற்றும் 10 பேர் மீது கவுரிகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்கிக்கொள்ளுங் கள் என்ற பேச்சு தொடர்பாகவும் கேஜ்ரிவால் தேர்தல் ஆணையத் தின் நடவடிக்கைக்கு ஆளாகலாம் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago