திரைமறைவிலிருந்து ஆட்சியை இயக்கிய அம்மாவும் மகனும் விலை கொடுத்தாக வேண்டும்: அசாமில் நடந்த பிரச்சாரத்தில் சோனியா, ராகுல் மீது மோடி தாக்கு

By செய்திப்பிரிவு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை திரைமறைவிலிருந்து இயக்கிய அம்மாவும் மகனும் அதற்காக விலை கொடுக்க வேண்டிவரும் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கிப் பேசினார்.

பொங்கைகாவ்ன் மாவட்டம் ககோய்ஜன்நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சனிக்கிழமை நரேந்திர மோடி பேசியதாவது:

காங்கிரஸ் கூட்டணி அரசில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் தான். பிரதமர் மன்மோகன் சிங் பெயரளவுக்குத் தான் என தொடர்ந்து கூறி வந்தோம். இதை உண்மையென நிரூபித்துவிட்டது பிரதமரின் ஊடகப்பிரிவு ஆலோசகர் சஞ்சய பாரு எழுதியுள்ள புத்தகம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உண்மையான பிரதமராக யார் செயல்பட்டது என்பதை இந்த புத்தகம் ஐயமற தெரிவித் திருக்கிறது. இதற்காக அம்மாவும் மகனும் விலை கொடுத்தாக வேண்டும். இன்றைய முக்கிய செய்தியாக எனக்குப் பட்டது பிரதமர் பற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு செய்தி.

தனது 10 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் 1100 உரைகளை நிகழ்த்தியிருக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. எனவே அவரை மவுனி என சொல் வதில் நியாயம் ஏதும் இல்லை.

பிரதமர் எத்தனை உரை கொடுத் துள்ளார் என்பதை விட அவர் நாட்டு மக்களுக்கும் ஏழைகளுக்கும் என்ன நன்மை செய்துள்ளார் என்பது பற்றி பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தால் பொருத்தமானதாக இருந்திருக் கும். அசாமில் உள்ள ஆதிவாசிகளுக்கும் பழங்குடிகளுக்கும் என்ன நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன என்பதை எப்போதுமே பிரதமர் அலுவலகம் வெளியிட்டதில்லை. இதற்கு காரணம் அவர்கள் உங்களை நினைவில் வைப்ப தில்லை. தேர்தல் வரும் போதுதான் உங்கள் மீது கவனம் வருகிறது. எனவே இப்போது நீங்கள் அவர்களை மறக்க வேண்டும்.

தேர்தல் வந்தால் மட்டும் ஓட்டு கேட்க வரும் அம்மாவும் மகனும் அரசை திரைக்கு பின்னாலிருந்து இயக்குகிறார்கள். எனவே நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் அந்த அம்மா, மகனி டமிருந்து நீங்கள் முதலில் காப்பாற் றிக்கொள்ளுங்கள். அசாமை காப்பாற்ற வேண்டும் என்றால் முதல்வர் தருண் கோகோய், அவரது மகன் கவுரவிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலில் இறங்கியுள்ளது. அசாமில் உள்ள வங்க தேசத்தவ ருக்கு முக்கியத்துவம் தரப்படுகி றது. மக்களின் நலனில் காங்கிரஸுக்கு எந்தவித அக்கறை யும் இல்லை. எனக்கு வாக்களித்தால் நாட்டின் எதிர் காலத்தை மாற்றி உங்கள் வாழ்வில் மாற்றம் கொண்டு வருவேன் என்றார்.

வாரணாசியில் 24-ல் மோடி மனு தாக்கல்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவை தொகுதியில் வரும் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் அமித் ஷா சனிக்கிழமை இதனை செய்தியாளர்களிடம் கூறினார். “வாரணாசியில் ஏப்ரல் 24-ல் மோடி வேட்புமனு தாக்கல் செய்கிறார். தற்போது வீசிக்கொண்டிருக்கும் மோடி அலை விரைவில் சுனாமியாக மாறும்” என்றார் அவர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்