பிரதமர் பதவி ஏற்கத் தயார் ராகுல் காந்தி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் பிரதமர் பொறுப்பை ஏற்கத் தயார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

'ஹெட்லைன்ஸ் டுடே' தொலைக் காட்சி செய்தி சேனலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசைவிட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

2004 போன்றே முடிவு இருக்கும்

மார்க்கெட்டிங் துறையில் பாஜக மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. அதனால்தான் கருத்துக் கணிப்புகள் அவர்களுக்குச் சாதகமாக வெளியிடப்படுகின்றன. 2004 பொதுத் தேர்தலிலும் அவர்கள் அதே உத்தியைக் கையாண்டார்கள். ஆனால் அந்தத் தேர்தலில் அவர்கள் தோல்வியைத் தழுவினர். இப்போதைய தேர்தலிலும் அதேபோன்ற நிலைமைதான் பாஜகவுக்கு ஏற்படும்.

பிரதமர் பொறுப்பை ஏற்கத் தயார்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கட்சி எம்.பி.க்கள் என்னை பிரதமராகத் தேர்ந்தெடுத்தால் அந்தப் பொறுப்பை ஏற்க நான் தயாராக உள்ளேன். அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.

பொருளாதார வளர்ச்சியில் இன்னும் 5 ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்திவிடும். ஆனால் அதற்கு இந்தியாவில் அமைதி நிலவ வேண்டும். இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் மகாராஷ்டிரமும் உத்தரப் பிரதேசமும் மோதலில் ஈடுபட்டால் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை.

மோடி மீது குற்றச்சாட்டு

என்னிடம் எல்லா அதி காரத்தையும் கொடுங்கள், நான் இந்த நாட்டின் பாதுகாவலனாக இருப்பேன் என்று மோடி கூறு கிறார். காங்கிரஸை பொறுத்த வரை அனைத்து அதிகாரமும் தனிநபரிடமும் குவிந்து இருக்கக் கூடாது என்று கருதுகிறோம். இந்த நாட்டுக்கு ஆயிரக்கணக்கான பாதுகாவலர்கள் தேவை.

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 கோடி மக்களை வறுமையில் இருந்து காங்கிரஸ் மீட்டெடுத்துள்ளது. தகவல் அறியும் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது.

எனினும் அரசுக்கு எதிராக சிறிய எதிர்ப்பு அலை உருவாகியிருப்பது உண்மைதான். அதை நாங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்