அதானி குழுமத்தின் சொத்து உயர்ந்தது எப்படி?: உ.பி. பொதுக்கூட்டத்தில் மோடிக்கு ராகுல் கேள்வி

குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் தொழிலதிபர் அதானி குழுமத்தின் சொத்துகள் ரூ. 3 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 40 ஆயிரம் கோடியாக உயர்ந்தது எப்படி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாட்டின் காவல்காரனாக தன்னை நியமிக்கும்படி மக்களிடம் மோடி கேட்கிறார். ஆனால் குஜராத்தில் இவரின் ஆட்சிக்காலத்தில் தொழிலதிபர் அதானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் பணம், நாடு முழுவதும் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தும் தொகைக்கு இணையானது. இவ்வளவு பணத்தை இந்த காவல்காரர் ஒரு நிறுவனத்துக்கு தந்துள்ளார்.

இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலே இந்தத் தேர்தல். ஒன்று காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம். ஜாதி, மதப் பாகுபாடின்றி அனைவரும் முன்னேற வேண்டும் என்பதே இதன் நோக்கம். மற்றொரு சித்தாந்தம், மக்களை இந்துக்கள், முஸ்லிம் என்று பிளவுபடுத்தும் எதிர்க்கட்சிக்குரியது. ஏழைகளும் முஸ்லிம்களும் முன்னேறுவதை இவர்கள் விரும்பவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் பந்தல்கண்ட் பகுதிக்கு மத்திய அரசு ஒதுக்கியத் தொகை இங்கு வந்துசேரவில்லை. இப்பகுதிக்காக மத்திய அரசு ரூ.7,700 கோடி ஒதுக்கியது. ஆனால் இத்தொகை தலைநகர் லக்னோவிலேயே மாயமாகிவிட்டது.

பாரதிய ஜனதா, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆட்சியில் இப்பகுதியில் வேலை வாய்ப்புத் திட்டங்கள் செயல் படுத்தப்படவில்லை. ஆனால் பந்தல்கண்ட் வழியாக தொழில் வளாகச் சாலை செல்வதற்கு காங்கிரஸ் வகை செய் துள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பந்தல்கண்ட் பகுதியில் குடிநீர் கிடைக்காமலும் பட்டினியாலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது தொடர்பாக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார் ராகுல்.

பாஜகவை விமர்சித்து அவர் மேலும் பேசுகையில், “பெண் களை உளவு பார்ப்பதற்கு இக் கட்சியின் தலைவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்