ராம்தேவ் பிரச்சாரம் செய்ய தடை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

யோகா குரு ராம்தேவ், உத்தரப் பிரதேசம் லக்னோ மாவட்டத்தில் மே 16-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் ஆணையம் வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலித்துகளின் வீடு களுக்கு தேனிலவு மற்றும் சுற்றுலா செல்வதுபோல் சென்று வருகிறார் என்று ராம்தேவ் விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் லக்னோ மாவட் டத்தில் மே 16-ம் தேதி வரை அவர் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் இதர பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படவில்லை.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறை களையும் அறிவித்துள்ளது.

தனிநபர்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்யக்கூடாது, இதனை மீறுவோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்கள் மீது சட்டபூர்வமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் மதஉணர்வைத் தூண்டும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது. அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

கைது செய்ய காங். கோரிக்கை

“தலித் சமுதாயத்தை ராம்தேவ் இழிவுபடுத்தியுள்ளார். இதுபோன்ற குற்றங்களை மன்னிக்க முடியாது. எஸ்.சி. எஸ்.டி. சட்டத்தில் அவரைக் கைது செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீம் அப்சல் கோரிக்கை விடுத் துள்ளார்.

இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சிகளும் ராம்தேவுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்