இமாம் புகாரி முஸ்லிம் மக்களின் உரிமையாளர் இல்லை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

"காங்கிரஸ் மற்றும் திரணாமுல் ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரே சமயத்தில் இமாம் ஆதரவு அளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. முஸ்லிம் சமுதாய மக்களுக்கு அழைப்பு விடுக்க அவர் ஒன்றும் அந்த சமுதாய மக்களின் உரிமையாளர் இல்லை" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில், இமாம் சயீது அகமது புகாரி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் திரணாமுல் காங்கிரஸுக்கும் ஆதரவு அளிப்பதாக கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது. மம்தா கட்சியும் காங்கிரஸும் நேரடியாக மோதிக் கொள்ளும் நிலையில் இது எவ்வாறு சாத்தியம் என்று தெரியவில்லை.

பாஜகவை பொருத்தவரை மதவாதம் செய்தே அரசியலில் சாதித்துவிடலாம் என்ற நோக்கத்தில் தேர்தலை சந்திக்கிறது. ஒரு வகையில் காங்கிரஸும் பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றே கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக நேற்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சயீது புகாரி தெரிவித்திருந்தார். மேலும் அவர் பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் ஆதரவு அளிப்பதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE