நடிகை விஜயசாந்தி, தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) தலைவர் கே. சந்திரசேகர் ராவ், அவரது மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோர் தெலங்கானா போராட்டத்தின்போது பொது மக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து முறைகேடு செய்த தாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித் துள்ளது.
தெலங்கானா போராட்டத்தின் போது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் கே. சந்திர சேகர் ராவ், அவரது மருமகன் ஹரிஷ் ராவ் மற்றும் கட்சியில் முக்கிய பங்கு வகித்த நடிகை விஜய சாந்தி ஆகியோர் பல கோடி ரூபாய் வசூல்செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கட்சியின் அதிருப்தி தலைவர் ரகுநந்தன் ராவ் குற்றம் சாட்டினார்.
இது குறித்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2001-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து முதலில் கீழ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு அறி வுறுத்தியது.
இந்நிலையில் ஹைதராபாதைச் சேர்ந்த பாலாஜி வதரே எனும் வழக்கறிஞர், இதுதொடர்பாக நாம்பள்ளி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசா ரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ அதிகாரிகளுக்கு உத்தர விட்டது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago