காங். வரலாற்றில் மோசமான தேர்தலாக அமையும்: நட்வர் சிங்

இந்த மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் வரலாற்றில் மிகமோச மான தேர்தலாக அமையும் என்று முன்னாள் வெளியுறவு அமைச் சரும், முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவருமான நட்வர் சிங் கூறியுள்ளார்.

தனது சொந்த ஊரான ராஜஸ் தான் மாநிலம் பரத்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:

இந்த தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 275 முதல் 280 இடங்களில் வெற்றி பெறும். நரேந்திர மோடி அடுத்த பிரதமராவார். தன்னை சரியான பாதையில் திருப்ப முயற்சிக்கும் மோடியால், சிறந்த பிரதமர் என்று நிரூபிக்க முடியும்.

ஆனால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை மாற்றுவது, வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது போன்ற முயற்சிகளுக்கு பலனிருக்காது.

காங்கிரஸ் வரலாற்றில் இது மிகவும் மோசமான தேர்தலாக அமையும். 100 இடங்களில் வெற்றி பெறுவதற்கு கூட அவர்கள் போராட வேண்டியது வரும்.

சோனியா காந்திக்கு விசுவாச மாக நடந்து கொண்ட மன்மோகன் சிங், பிரதமர் பதவிக்கு உரிய மரியாதையை குலைத்துவிட்டார் என்று நட்வர் சிங் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்