உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி யில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நடத்திய ஊர்வலம் சட்ட விரோதமானது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும் காங்கி ரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான ஆனந்த் சர்மா புகார் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர் களிடம் ஆனந்த் சர்மா வியாழக்கிழமை கூறியதாவது: “வாரணாசியில் வேட்புமனு தாக்கல் என்ற பெயரில் பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நடத்திய ஊர் வலம் தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையத்திடம் உத்தரப் பிரதேச மாநில அரசு புகார் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கி ரஸ் கட்சியும் புகார் தெரிவிக்க வுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங் களில் உள்ள 117 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், வாக்காளர் களைக் கவரும் வகையில், வாக்குப்பதிவு செய்யும் நேரத்தில் வேட்பும னுவை மோடி தாக்கல் செய்துள்ளார். இந்நிகழ்ச்சி அனைத்து தொலைக் காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது. வாக்குப் பதிவு நடைபெறும் மாநிலங்க ளில் பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலை யில், அப்பகுதிகளிலும் தொலைக்காட்சியில் மோடி தொடர்பான செய்தி வெளியிடப் பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறிய நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் தானாகவே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல் நோட்டீஸ் அனுப்பிவிட்டு அமைதியாக இருந்து விடாமல், நரேந்திர மோடி உள்பட ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்”. இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago