்தேர்தல் விதிமுறைகளுக்கு புறம் பாக, வாக்களித்தபின் தான் யாருக்கு வாக்களித்தோம் என பகிரங்கமாக தெரிவித்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் வாக்கு செல்லாது என ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் பன்வர்லால் அறிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராம்னி ஆகியோருடன், ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடிக்கு புதன்கிழமை வந்தார். பின்னர், வாக்களித்துவிட்டு அங்குள்ள செய்தியாளர்களிடம் நாயுடு பேசும்போது, தெலுங்கு தேசம் கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க முடியாதது வருத்தத்தை அளித்தாலும், கூட்டணி தர்மத்தின் காரணமாக பா.ஜ.க.விற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார். இதனை தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையர் பன்வர்லால் செய்தியாளர்களிடம் கூறியது, தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தான் வாக்களித்ததை பகிரங்கமாக அறிவித்திருப்பது தவறாகும். வாக்காளர்கள் பகிரங்கமாக தான் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கக் கூடாது. ஆனால் கட்சியொன்றின் தலைவரான சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்களிடம் தான் பா.ஜ. கட்சிக்கு வாக்களித்தேன் என கூறி உள்ளார். இதன் காரணமாக அவர் வாக்கு செல்லாது. இவ்வாறு தேர்தல் ஆணையர் பன்வர்லால் கூறினார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago