மோடியின் மீது முஸ்லிம்களுக் கிடையே உள்ள அச்சம், அவர் பிரதமரான பின்பு நீங்கி விடும். என்று குஜராத் முன்னாள் அமைச் சரும், பாஜக உத்தரப்பிரதேச தேர்தல் பொறுப்பாளருமான அமித் ஷா கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “மோடி பிரதமரா னால் பிரச்சினை ஏற்படும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதுபோன்ற சந்தேகத்தை ஊடகங்களும் எழுப்பி வரு கின்றன. ஆனால், மோடி பிரதம ரான பின்பு, தனது ஆட்சி நிர்வாகத்தால் இந்த சந்தேகத்தை போக்குவார். அதுவரை அவர் மீது சந்தேகப்படும் போக்கு இருக்கத்தான் செய்யும்.
மோடி குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த மோடிக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
நாட்டில் பாஜக அலை வீசுகிறது; மோடி அலை வீசுகிறது என்று ஊடகங்கள் கூறி வருகின்றன. இரண்டும் ஒன்றுதான். பாஜகவுக்கும், மோடிக்கும் சேர்த்துத்தான் அலை வீசுகிறது. பாஜக சார்பில் தேர்தலை வழிநடத்தவும், பிரதமர் வேட்பாளராகவும் மோடியை நியமித்துள்ளோம்.
உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும்’’ என்றார் அமித் ஷா.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago