மக்களவைத் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப் பதிவு 4 வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
மிசோரம் மாநிலத்தில் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமைக்கு (ஏப். 11) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
16-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு அசாமில் 5, திரிபுராவில் 1 என 6 தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் தலா 1 தொகுதியிலும், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளிலும் இன்று நடைபெறுகிறது.
அருணாச்சலப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் அம்மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று 2 மக்களவை தொகுதிகளுடன் 49 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனிடையே ஒரே மக்களவை தொகுதியைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago