தனி தெலங்கானா அமைக்கப்பட்டதற்குப் பின் அந்த மாநிலம் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அந்த மாநிலத்துக்குட்பட்ட 17 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் ஒரே சமயத்தில் நடைபெறுகிறது.
ஆந்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய தெலங்கானா மாநிலம் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்க உள்ளது. அதேநாளில், தெலங்கானா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் முதலாவது அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும். அந்த புதிய ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கும் உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்காக அங்குள்ள மக்கள் உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி அங்கு 15.3% வாக்குகள் பதிவாகின.
சில வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாக புகார் வந்ததை அடுத்து, அங்கு இயந்திரங்கள் மாற்றித் அமைக்கப்பட்டன. இதனை அடுத்து அங்கு அமைதியான நிலையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அதிகபட்சமாக மகபூப் நகரில் 17.1% வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக ஹைதராபாதில் 10.4% வாக்குகள் பதிவாகி உள்ளது.
சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,669 வேட்பாளர்களும், நாடாளுமன்றத் தொகுதிகளில் 265 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
நாட்டின் 29வது மாநிலமாக உதயமாகியுள்ள தெலங்கானாவில், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்), தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி ஆகிய பிரதான கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன.
புதிய தெலங்கானாவில் நடைபெறும் முதலாவது தேர்தல் என்பதாலும் நக்ஸலைட்டுகளால் தேர்தல் நடைமுறைகள் சீர்குலைக்கப்படும் என்ற அச்சத்தாலும் அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 90,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், விமானப்படையைச் சேர்ந்த 4 ஹெலிகாப்டர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago