மக்களை மிரட்டுவதுதான் ‘குஜராத் மாதிரியா’ என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.
கேஜ்ரிவாலுக்கு ஆதரவு திரட்டும் வகையில் வாரணாசியின் அஸ்ஸி காட் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சோம்நாத் பாரதி பங்கேற்றார். அப்போது, அவரை பாஜக தொண்டர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வாரணாசியில் செய்தி யாளர்களிடம் கேஜ்ரிவால் வியாழக் கிழமை கூறியதாவது: “இந்த புனித நகருக்கு என்ன மாதிரியான கலாச்சாரத்தைக் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது?
இதுபோன்ற தாக்குதல்கள் இந்நகரின் பாரம் பரியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் எதிரானவை. மக்களை விலை பேசுவதும், அவர்களை மிரட்டுவதும்தான் குஜராத் மாதிரியா?
அரசு நிர்வாகம் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பாரபட்சமான முறையில் செயல்படுகிறது. சோம்நாத் பாரதியை தாக்கியவர் கள் மீது இதுவரை எந்தவித மான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. சோம்நாத் பாரதியை தாக்கிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் பிரஷாந்த் பூஷண் புகார் மனு அளிக்கவுள்ளார்.
சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று ஆணையத்திடம் வலியுறுத்த வுள்ளோம். இந்த தேர்தலில் பாஜவுக்கு எதிரான மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பார் களோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.
எனது ஆதரவாளர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. மோடி வேட்பு மனு தாக்கல் செய்வதற் காக நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆனால், எங்களின் கோரிக்கை களை அதிகாரிகள் ஏற்பதில்லை.
பாஜகவுக்கும் சமாஜ்வா திக்கும் மறைமுக ஒப்பந்தம் இருக்கும் என நினைக்கிறேன். சாலை வழியே வாகனத்தில் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய இங்கு எனக்கு அனுமதி கிடைக்க வில்லை. வாரணாசியி்ல் நடைபெற்ற முந்தைய பிரச்சாரம் ஒன்றில் என் மீது மை வீசப்பட்டது. அந்த சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டது யார் என்பதை போலீஸார் கண்டறிய வேண்டும்” என்றார் அர்விந்த் கேஜ்ரிவால்
தேர்தல் ஆணையத்திடம் புகார்
இதற்கிடையே பாஜக எம்.எல்.ஏ. ஜோத்ஸ்னா ஸ்ரீவாஸ்தவாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி புகார் மனு அளித்துள்ளது. வீடு வீடாகச் சென்று அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வரும் ஆம் ஆத்மி கட்சியினரை விரட்டியடிக்க வேண்டும் என்று ஜோத்ஸ்னா கூறியிருந்தார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago