வாஜ்பாயையும் வெளியேற்றி இருப்பார் மோடி: ராஜஸ்தான் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சனம்

By செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இப்போது பொது வாழ்வில் இருந்திருந்தால் அவரையும் நரேந்திர மோடி வெளியேற்றி இருப்பார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கராலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாபி மக்கள் அண்மையில் என்னைச் சந்தித்தனர். அவர்களின் முன்னோர்கள் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து குஜராத் தில் குடியேறியவர்கள். தாங்கள் வசித்த பூமியில் கடுமையாக உழைத்து அந்த மண்ணை வளம் கொழிக்கும் வேளாண் நிலமாக அவர்கள் மாற்றியுள்ளார்.

ஆனால் முதல்வர் நரேந்திர மோடி அரசு, அந்த பஞ்சாப் மக்களை வெளிமாநிலத்தவர் என்று குற்றம்சாட்டி நிலத்தை ஒப்ப டைத்துவிட்டு மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளது.

இதே அணுகுமுறையைத்தான் கட்சியிலும் நரேந்திர மோடி கடைப்பிடித்து வருகிறார். எல்.கே.அத்வானி, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் இப்போது வெளி நபர்களாகக் கருதப் படுகின்றனர். அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளனர். ஒருவேளை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இப்போது பொதுவாழ்வில் இருந்திருந்தால் அவரையும்கூட மோடி வெளியேற்றி இருப்பார்.

அதானி குழுமத்துக்கு நிலம் தாரைவார்ப்பு

சுமார் 45,000 ஏக்கர் நிலம் சதுர மீட்டர் ஒரு ரூபாய்க்கு அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருக் கிறது. உங்கள் பெயரில் அதானி இருந்தால் நீங்களும்கூட அதே தொகைக்கு குஜராத் அரசிடம் இருந்து நிலத்தைப் பெறலாம்.

குஜராத்தில் ஜவுளித் துறை மூடுவிழா கண்டுள்ளது. விவசாயிக ளின் நிலம் பறிக்கப்பட்டு தொழில திபர்களுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்