என் மீதான தாக்குதல்களுக்கு பாஜகவே காரணம்: அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சமீப காலத்தில் என் மீது நடத் தப்பட்ட அனைத்து தாக்குதல் களுக்கும் பாஜகவே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி மக்களவைத் தொகுதி யில் கேஜ்ரிவால் போட்டியிடு கிறார். இந்நிலையில் வாரணாசி யில் அவர் சனிக்கிழமை பேசுகை யில், “அறை, குத்து, கல்வீச்சு என என் மீது நடத்தப்பட்ட அனைத்து தாக்குதல்களுக்கும் பாஜகவே காரணம்” என்றார்.

வாரணாசியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்த கேஜ்ரிவால், முசாபர் நகர் கலவரம் குறித்து அதிகம் பேசினார். மேலும் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

“நெசவாளர் கடன் அட்டை பெறுவதற்கு நெசவாளர்கள் ரூ.100 லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு சேவையைப் பெற சாதாரண மக்கள் லஞ்சம் தரவேண்டி யுள்ளது. ஒரு மனிதன் இறந்த பிறகும் அவனை இந்த அலுவல கங்கள் விட்டுவைப்பதில்லை. அவனது இறப்புச் சான்றிதழ் தருவதற்கும் லஞ்சம் கேட்கப் படுகிறது” என்றார் கேஜ்ரிவால்.

நரேந்திர மோடியை அவர் விமர்சித்துப் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் குஜராத் முதல்வர் தோற்கடிக்கப்பட வேண்டும். மோடி மற்றும் பாஜகவின் பிரச்சாரத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடி கறுப்பு பணம் செலவிடப்படுகிறது” என்றார். தேர்தல் பிரச்சாரத்துக்காக பெரும் தொகையை செலவிடுவதாக காங்கிரஸ் கட்சி மீதும் அவர் குற்றம் சாட்டினார்.

முதல்வர் பதவியிலிருந்து விலகியது தவறு

முன்னதாக கிராமப் புறங்களில் கேஜ்ரிவால் வாக்கு சேகரிக்கும்போது, “டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன் மக்களிடம் கலந்தாலோசிக்காதது எனது தவறுதான்” என்றார்.

“முதல்வர் போன்ற முக்கியப் பதவியில் இருந்து யாரும் விலக விரும்பமாட்டார்கள். ஆனால் அப்பதவியில் நீடிக்க எனது மனம் என்னை அனுமதிக்கவில்லை. இதனால் நான் ராஜினாமா செய்தேன். இவ்வாறு செய்ததன் மூலம் நான் செய்த தவறு என்னவென்று கூறுங்கள்.

அரசின் ஒரு கடைநிலை ஊழியர் கூட தனது பணியை ராஜினாமா செய்ய விரும்பு வதில்லை. முதல்வர் பதவியில் இருந்து விலகுவது பெரிய விஷயம். இதற்கு ஒருவருக்கு திடமான மனம் வேண்டும். 56 இன்ச் மார்பு இருந்தால் மட்டும் போதாது” என்றார் கேஜ்ரிவால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்