கைகளில் ரத்தக்கறை படிந்தவர் தேசத்தைப் பற்றி பேசக்கூடாது என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது, "கைகளில் ரத்தக் கறை படிந்தவர் தேசத்தைப் பற்றி பேசக் கூடாது. குஜராத் கலவரம் நடந்த போது திரிணமூல் காங்கிரஸ் மத்திய அரசில் அங்கம் வகித்தது. குஜராத் கலவரத்தை திரிணமூல் ஒருநாளும் ஆதரித்தது இல்லை.
திரிணமூல் காங்கிரஸ் எப்போதும் மத நல்லிணக்கத்திற்காகவே பாடுபட்டிருக்கிறது. என் உயிரை கொடுத்தாவது ஒற்றுமையை நிலை நாட்டுவேன். இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
பாஜகவும் காங்கிரஸும் இணைந்து நாட்டை பிரிக்க முயற்சிக்கின்றன. தெலுங்கானா பிரிவினையே இதற்குச் சான்று. மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாப் போவதில்லை" என்றார் மம்தா பானர்ஜி.
முன்னதாக, சிலிகுரியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, தன்னை குறைகூறி விமர்சிக்காவிட்டால் மம்தா பானர்ஜிக்கு ஜீரணம் ஆகாது என்று சாடியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago