வரவிருக்கும் மக்களவை தேர்தல், இரு வேறு கொள்கைகளுக்கு இடையேயான போட்டி என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட சோனியா காந்தி கூறியதாவது: "பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமுதாயத்தை பிரிக்க முற்படும் குறுகிய, தீவிரவாத கொள்கைகளுக்கு ஏற்றார்போல் ஆடிக்கொண்டிருக்கிறது.
ஒருபுறம், இஸ்லாமிய சமுதாயத்தினர் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கிறது. குறிப்பாக சிறுபான்மையினர் நலன் காக்க தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என உறுதியளித்திருக்கிறது. மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத் ஆகியோர் ஏற்படுத்தித் தந்த வழியில் செல்கிறது காங்கிரஸ்.
மற்றொரு புறம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமுதாயத்தை பிரிக்க முற்படும் குறுகிய, தீவிரவாத கொள்கைகளுக்கு ஏற்றார்போல் ஆடிக்கொண்டிருக்கிறது பாஜக. அவர்களது அந்த கொள்கை இந்த தேசத்தில் நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியத்தையும், மதிப்பீடுகளையும் சிதைத்துவிடும். அத்தகைய கட்சிக்கு மக்கள் தோல்வியைத் தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
மேலும், காங்கிரஸ் கட்சி மட்டுமே மத்தியில் நிலையான, வலுவான ஆட்சியை அளிக்க முடியும் எனவும் சோனியா கூறினார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago