மக்களவைக்கு 4ம் கட்டமாக அசாம், கோவா, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி மொத்தம் 7 தொகுதிகளுக்கு சனிக்கிழமை நடந்த தேர்தலில் வாக்காளர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மிக அதிக அளவாக கிழக்கு திரிபுரா தொகுதியில் 81.8 சதவீதம் பேர் வாக்களித்தனர். கடந்த முறை இந்த தொகுதியில் 83.11 சதவீத வாக்கு கள் பதிவாகின. 7 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ள 74 பேரின் தலைவிதியை சுமார் 50 லட்சம் வாக்குகள் தீர்மானிக்க உள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் டெல்லியில் தெரிவித்தன. கோவா வில் ஒரே கட்டத்தில் 2 தொகுதி களுக்கும் நடந்து முடிந்த தேர்த லில் 75 சதவீதம், அசாமில் 3 தொகுதிகளில் 75 சதவீதம், திரிபுரா வில் 81.8 சதவீதம், சிக்கமில் உள்ள ஒரே தொகுதியிலும் 32 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கும் சேர்ந்த நடந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகளும் பதிவாகின என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறின.
அசாமில் சில்சார், கரிம்கஞ்ச், மலை மாவட்டங்களுக்கான (தன் னாட்சி மாவட் டம்) தொகுதிக்கும், கோவாவில் வடக்கு கோவா, தெற்கு கோவா ஆகிய தொகுதிக ளுக்கும், திரிபுராவில் திரிபுரா கிழக்கு (ரிசர்வ்) தொகுதிக்கும், சிக்கிமில் சிக்கிம் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்தது. திரிபுரா மேற்கு தொகுதிக்கு ஏப்ரல் 7ல் வாக்குப்பதிவு நடந்தது.
அசாமில் 3 தொகுதிகளுக் கும் நடந்த தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி நடந்து முடிந்தது.
அசாமில் ஏப்ரல் 7ம் தேதி தேஸ்பூர், கலியாபூர், ஜோர் ஹாட், திப்ரூகர், லகிம்பூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. மாநிலத்தில் இறுதியாக 24ம் தேதி நடக்கும் 3ம் கட்டத்தில் மீதமுள்ள தூப்ரி, கோக்ரஜ்ஹார், பார்பேட்டா, கவு ஹாட்டி, மங்கள் தாய் நவ்காங் ஆகிய 6 தொகு திகளுக்கு வாக்குப்பதிவு நடக்கும்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago