மோடி பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம்: பிரியங்காவுக்கு அருண் ஜேட்லி கோரிக்கை

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்காக ரேபரேலி தொகுதி யில் பிரச்சாரம் செய்து வரும் அவரது மகள் பிரியங்கா வதேரா, மோடி மீதான தனிப்பட்ட விமர் சனத்தை தவிர்க்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கோரியுள்ளார்.

இதுகுறித்து ஜேட்லி விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தான் அரசியலில் இல்லை என பிரியங்கா கூறுகி றார். ஆனால் அவர், தனது தாய் மற்றும் சகோதரருக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு அவர் பொறுப்பானவரும் கூட.

அதில், தனது கணவர் ராபர்ட் வதேரா மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இவர், கூறுவது சரியானதே. இதைச் செய்வதால் மற்றவர் மனதும் புண்படும் என்பது உண்மைதான்.

ஆனால் அதை அவரது காங்கிரஸ் கட்சி நண்பர்களே கடைபிடிப்பதில்லை. பால்ய விவாகம் எனக் கூறப்படுவதில், அகமதாபாதில் ஒரு பெண்ணின் பாதுகாப்பு ஆகியவற்றில் அவர், நரேந்திர மோடியின் மீது தனிப்பட்ட முறையில் தாக்கு தல் நடத்தி வருகிறார்கள். மோடிக்கு தொடர்பில்லை என்று நீதிமன்றங்கள் கூறிய பிறகும் கடந்த 12 ஆண்டுகளாக அவரை, ‘சாவின் வியாபாரி‘ என பிரியங்காவின் தமையனும், தாயாரும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இது நிறுத்தப்பட வேண்டும். நல்ல விஷயங்களை பிரியங்கா தம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி மதச்சார்பின்மை

ஆம் ஆத்மி கட்சி இந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ஜேட்லி, அக்கட்சியின் பெண் பிரதிநிதி ஒருவர் தனது சமூகம் மதச்சார்பின்மையைக் கைவிட்டு மதவெறி அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, ஆம் ஆத்மி கட்சியின் முகமூடி நழுவி வருகிறது என்று கூறியுள் ளார். ஜனரஞ்சக முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்து வாக்குகளைப் பெற வேண்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அம்ரிந்தர் மீது விமர்சனம்

தனக்கு எதிராகப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அம்ரிந்தர் சிங் முன்பு முதலமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத் தில் நகர்ப்புறங்களில் சொத்து வரி விதிக்க மத்திய அரசுக்கு வாக்கு கொடுத்துவிட்டு (7-12-2006 அன்று அவர் கையெழுத்திட்ட குறிப்பின் நகலை தான் வெளியிட்டதாக ஜேட்லி தெரி வித்துள்ளார்) தற்போது அது மாநில அரசின் தலைமைச் செயலாளரால் கையெழுத்திடப்பட்டது என்று கூறுவதும், 1984 கலவரத்தில் ஜகதீஷ் டைட்லர் ஈடுபடவில்லை என்று அவர் சொன்னது, அவர் குற்றமற்றவர் அல்ல என்று பொருளாகாது என்பதும் ஒரு ஆங்கில நாவலில் வரும் ’ஹம்ப்டி டம்ப்டி’ பாத்திரத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று ஜேட்லி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்