என்னை சிறையில் தள்ள காங்கிரஸ் ஓவர்டைம் பார்க்கிறது: மோடி தாக்கு

By செய்திப்பிரிவு

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் என்னை சிறைக்கு அனுப்ப 'ஓவர்டைம்' பார்த்து வருகிறது என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இன்று பால்மர் தொகுதியில் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், “ தேர்தல் பிரசாரங்களுக்காக நான் ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. அடுத்த 30 அல்லது 40 நாட்களுக்கு மத்திய அமைச்சரவையை காங்கிரஸ் தான் தலைமை தாங்க போகிறது ஆகவே அவர்கள் தங்களிடம் உள்ள அனைத்து புலனாய்வுதுறைகளையும் வைத்து விசாரணை செய்யலாம்.

ராணுவம், காவல்துறை , சிபிஐ என அனைத்து பிரிவையும் வைத்து என்னிடம் விசாரணை நடத்தட்டும். இதற்கு பணம் எங்கிருந்து வந்தது, எப்படி செலவழித்து உள்ளேன். என்பதை அவர்கள் கண்டுபிடிக்க நான் அனைத்து ஒத்துழைப்பும் அளிப்பேன். ஆட்சி அமைத்த கடந்த 10 ஆண்டுகளில் கடும் குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துவதே காங்கிரசின் வேலையாக மாறிவிட்டது.

அடுத்த 30 அல்லது 40 நாட்களுக்கு காங்கிரஸ் தான் ஆட்சியில் நீடிக்கப் போகிறது, அதற்குள் சிபிஐயை வைத்து என்னை சிறைக்கு அனுப்ப முயற்சிக்களாம் என்று மோடி கூறினார். ” என்று மோடி கூறினார்.

முன்னதாக தேர்தல் பிரசாரத்திற்காக மோடி ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்ததாகவும், இந்த பணம் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்