ரங்கநாதன் - மாநில அமைப்பாளர், ஐந்தாவது அட்டவணைக்கான ஆதிவாசிகள் பிரச்சாரக் குழு.
நீலகிரியில் ஆறு பண்டைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த நான்கு சதவீத பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிகூடப் பழங்குடியின மக்களுக்கானது அல்ல. எனவே, தமிழகத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியைக் கண்டறிந்து, அந்தத் தொகுதியைப் பழங்குடியினர் தொகுதியாக அறிவிக்க வேண்டும்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் சுய நிர்ணய அரசியலமைப்பின் கீழ் இயங்க அரசு ஐந்தாவது அட்ட வணையை நடைமுறைப்படுத்திவருகிறது. இதை அமல்படுத்த மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்தும் தமிழக அரசு இதை அமல்படுத்தவில்லை. உடனடியாக அந்த அட்டவணையை அமல்படுத்த வேண்டும்.
ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு 100 லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை.
மற்ற மாநிலங்களில் பழங்குடியினர் நிலத்தைப் பிறர் வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ தடை உள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அந்தச் சட்டத்தை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாகப் பழங்குடியின மக்கள் வசித்துவரும் நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். வனச் சட்டத்தை முறையாக அமல்படுத்தும் வரை வனங்களில் குடியிருக்கும் ஆதிவாசி மக்களை வெளியேற்றக் கூடாது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago