இது எம் மேடை: சுதந்திரமாக மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் தேவை

டாக்டர் குமாரவேலு - வங்கக் கடல் மீன் தொழிலாளர்கள் சங்க ஆலோசகர், நாகப்பட்டினம்.

எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் தொடரும் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாண புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். ஏற்கெனவே, 1974-ல் கச்சத்தீவு ஒப்பந்தம், 1976-ல் முச்சந்தி ஒப்பந்தம் ஆகியவை இருந்தாலும், அவை மீனவர்களுக்குச் சுதந்திரமாக மீன் பிடிக்க உரிமை வழங்கினாலும் அதற்கு இரு நாடுகளும் அனுமதிப்பதில்லை.

அதனால், தற்போது இரு நாட்டு மீனவர்களும் எந்தத் தடையும் இல்லாமல் இரு நாட்டுக் கடல் பகுதியிலும் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதித்து, புதிய ஒப்பந்தம் போடப்படப்பட வேண்டும். அதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் தமிழகத்தின் கடலோர சோகம் நிரந்தரமாகக் களையப்படும். இதுவரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 200 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 600 பேர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். இவை எல்லாம் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றாலும், எங்களுக்கான பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினர்தான். அவர்தான் நாடாளுமன்றத்தில் அழுத்தமாகக் குரல் எழுப்பி பிரச்சினைகளைத் தீர்த்திருக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE