சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 5 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம்நிரப்பப்படுகின்றன. இந்தாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு இணையவழியில் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.
ஒரு லட்சத்து 1,342 பேர்: இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கியது. இதுவரை ஒரு லட்சத்து 89,881 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 1,342 பேர் கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் விளையாட்டு வீரர் சிறப்பு ஒதுக்கீடு பிரிவில்விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஜூன் 5 முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக பங்கேற்கும் மாணவர்களின் பட்டியல்www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago