பிளஸ் 1 முடிவுகள் | கணக்குப் பதிவியலில் 995 பேர் முழு மதிப்பெண்; தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் பொதுத் தேர்வு 1 முடிவுகளில் அதிகபட்சமாக கணக்குப் பதிவியலில் 995 பேர் முழு மதிப்பெண் எடுத்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்பட்டன. மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவியர்களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.93. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 3,91,968. மாணவர்களின் எண்ணிக்கை 3,14,444. மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.36. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.99. மாணவர்களை விட மாணவியர்கள் 7.37 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழில் 9 பேர், ஆங்கிலத்தில் 13 பேர், இயற்பியலில் 440 பேர், வேதியியலில் 107 பேர், உயிரியலில் 65 பேர், கணிதத்தில் 17 பேர், தாவரவியலில் 2 பேர், விலங்கியலில் 34 பேர், கணினி அறிவியலில் 940 பேர், வணிகவியலில் 214 பேர், கணக்குப் பதிவியலில் 995 பேர், பொருளியியலில் 40 பேர், கணினிப் பயன்பாடுகளில் 598 பேர், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 132 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும், தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் (96.38%) மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. 2-வது இடத்தில் ஈரோடு (96.18%), 3வது இடத்தில் கோவை (95.73%), 4வது இடத்தில் நாமக்கல் (95.60%), 5வது இடத்தில் தூத்துக்குடி (95.43%) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE