பிளஸ் 1 முடிவுகள் | பாடவாரியாக தேர்ச்சி விகிதம் - கணினி அறிவியலில் உச்சம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.25 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்பட்டன. மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவியர்களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.93. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 3,91,968. மாணவர்களின் எண்ணிக்கை 3,14,444. மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.36. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.99. மாணவர்களை விட மாணவியர்கள் 7.37 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.25 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 95.37 சதவீத பேரும், வேதியியல் பாடத்தில் 96.74 சதவீத பேரும், உயிரியல் பாடத்தில் 96.62 சதவீத பேரும், கணிதப் பாடத்தில் 96.01 சதவீத பேரும், தாவரவியல் பாடத்தில் 95.30 சதவீத பேரும், விலங்கியல் பாடத்தில் 95.27 சதவீத பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 99.25 சதவீத பேரும், வணிகவியல் பாடத்தில் 94.33 சதவீத பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 94.97 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடப் பிரிவுகளில் 93.38 சதவீத பேரும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் 88.08 சதவீத பேரும், கலைப் பிரிவுகளில் 73.59 சதவீத பேரும், தொழிற்பாடப் பிரிவுகளில் 81.60 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE