சென்னை: தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 2 லட்சத்து 37,985 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 85,009 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நாளையுடன் (மே 19) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.
அதன்பின் சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரி அளவில்) மே 25 முதல் ஜூன் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும். தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
9 hours ago
கல்வி
14 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago