ஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: ஐசிஎஸ்இ வாரியத்தின் 10-ம்வகுப்பு தேர்வு கடந்த பிப்.27 முதல்மார்ச் 29-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை நாடு முழுவதும் 2.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அதேபோல, 12-ம்வகுப்பு தேர்வு பிப்.13-ம் தொடங்கிமார்ச் 31-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 98,505 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வில் 98.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவிகள் 99.2 சதவீதம் பேரும், மாணவர்கள் 98.71 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 9 பேர் 99.8 சதவீத மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளனர்.

12-ம் வகுப்பு தேர்வில் 96.93சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் 98.01 சதவீதம் பேரும், மாணவர்கள் 95.96 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.75 சதவீத மதிப்பெண் பெற்று 5 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். தேர்வு முடிவுகளை cisce.org மற்றும் results.cisce.org ஆகிய இணையதளங்களில் அறியலாம் என ஐசிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

மேலும்